தாம்பரம் காவல் ஆணையரக அலுவலகம் அமைக்க தற்காலிக இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம் :

தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்காலிகமாக அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை பெருநகர காவல்துறையைப் பிரித்து தாம்பரம் காவல் ஆணையரகம் அமைக்கப்படும் என, கடந்த செப். 13- ம் தேதிதமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் அறிவித்தார்.இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு காவல் மாவட்டங்களைச் சோ்ந்த சில பகுதிகளும் சோ்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து தாம்பரம் காவல்ஆணையரக எல்லைப் பகுதிகளைப் பிரிப்பது, காவல் நிலையங்களைப் பிரிப்பது, புதிதாக நிர்வாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே புதிய காவல் ஆணையரகத்தை விரைந்து கட்டமைக்கும் வகையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்புஅதிகாரியாக தமிழக காவல்துறையின் நிா்வாக பிரிவு ஏடிஜிபி எம்.ரவி நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் ஆணையரகம் அமைக்க தாம்பரம் சானடோரியம் பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று உள்ளது. வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அந்த இடம் தொடர்பாக ஆய்வு அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் தற்காலிகமாக ஆணையரக அலுவலகம் அமைக்கவும் இடம் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாம்பரம் அருகே செம்பாக்கம் நகராட்சியில் ஒருங்கிணைந்த சார்பதிவு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை சார்பதிவாளர் அலுவலகமாக இதுவரை பயன்படுத்தவில்லை. இதனால், இந்த இடத்தில் தற்காலிகமாக தாம்பரம் காவல் ஆணையரகம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடத்தை தாம்பரம் காவல் ஆணையரின் சிறப்பு அதிகாரி முனைவர் மு.இரவி, மாவட்ட ஆட்சியர்ஆ.ர.ராகுல் நாத் ஆகியோர் நேற்றுபார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பான ஆய்வு அறிக்கை, அரசுக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படும். அவர்கள் எடுக்கும் முடிவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுதொடர்பாக, இந்த இடத்தில் நேற்று, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்