ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா நீர்தேக்கத்தில் இருந்து சுமார் 4,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது பாலாற்றின் இடதுப்புற கிளை நதியான பொன்னை நதியில் பாய்ந்து இரவு 10 மணியளவில் பொன்னை அணையை வந்தடையும். எனவே காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் வட்டங்களைச் சேர்ந்த பாலாற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாயம் இருப்பதால் நிவாரண முகாம்களில் தங்க வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும்.
வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளை ஆற்றின் அருகில் செல்லாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கால்நடைகள் ஆற்றுப் பகுதிக்குள் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago