மணல் கடத்தியதாக பறிமுதலான மாட்டுவண்டிகளை திருப்பித் தாருங்கள் : அரசுக்கு மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் மாநில மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பவ்டா அரங்கில் நடைபெற்றது.

பவ்டா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோச கருமான ஜாஸ்லின் தம்பி முன்னி லையில், மாநிலத்தலைவர் திண்டுக்கல் எஸ் ராஜேந்திரன் தலை மையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கடந்த 4 ஆண்டுகளாக வாழ் வாதாரத்தை இழந்து தவிக்கும் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு ஆறுகளில் மணல் குவாரி அமைத்து கொடுத்து, சிறைபிடிக்கப்பட்டு காவல் நிலையங்களில் வைக்கப் பட்டுள்ள மாட்டு வண்டிகளை திருப்பி அளித்து, அவர்கள்மேல் பதியப்பட்ட வழக்குகளை திரும்பபெறுமாறு முதல்வருக்கு வேண்டு கோள் வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாட்டு வண்டி தொழி லாளர்களுக்கு மணல் எடுக்கவும் அனுமதி இல்லை. மாற்று வழியும் ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் நீதி மன்றத்தை நாடுவதை தவிர வேறு வழி இல்லை. மத்திய அரசின் ‘இ ஷாரம்’ பிரிவில் உறுப்பினர்களை பதிவு செய்ய முடிவு எடுக்கப் பட்டது. நலவாரியத்தின் பலன் களை பெற அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. அனை வரின் குடும்பத்தாரும் 2 தவணைகரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். அரசு அறி விக்கும் வரை கரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தொடர்ந்து சங்கத்தின் மாநிலதலைவராக திண்டுக்கல் ராஜேந்தி ரன், மாநில துணைத்தலைவராக சென்னை பெருமாள், மாநில பொதுச் செயலாளராக கடலூர்சௌந்தர், மாநில துணை செயலாளர்களாக ராணிப்பேட்டை மதிவாணன், திருச்சி மாதவன், மாநில பொருளாளராக திருக் கோவிலூர் தண்டபாணி மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மாநில துணை செயலாளர் ராணிப் பேட்டை மதிவாணன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்