அமைப்பு சாரா சங்க உறுப்பினர்களுக்கு - தீபாவளி உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்குக :

ஏஐடியூசி புதுவை மாநில பொதுக் குழு கூட்டம் முதலியார்பேட்டை தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட் டத்துக்கு ஏஐடியூசி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். நடைபெற்ற வேலைகள், எதிர்கால செயல் பாடுகள் குறித்து ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் பேசினார். மாநில துணைதலைவர்கள், மாநில செயலாளர் கள் உட்பட பொதுக்குழு உறுப்பி னர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அமைப்பு சாரா சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் வழங்கி வந்த உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

அரசு ஊழியர்கள் மற்றும் அரசுசார்பு நிறுவனங்களில் பணிபுரிய கூடிய அனைவருக்கும் தீபாவ ளிக்கு வழங்கப்படும் போனஸ் உச்சவரம்பை உயர்த்தி வழங்கிட வேண்டும். அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியக் கூடியதொழிலாளர்களுக்கு ஆண்டுக்கணக்கில் ஊதியம் வழங்கப்ப டாமல் இருந்து வருகிறது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அனைவருக்கும் இரண்டு மாதம் ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால் இதுவரை பல நிறுவனங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக ஊதியம் வழங்குவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட இந்த 3 கோரிக் கைகளை தீபாவளிக்கு முன்ன தாக நிறைவேற்றிட வேண்டும். தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் அமைப்புசாரா வாரியத்தை செயல்படுத்த அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து வாரியத்தை விரைவாக செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண் டும். இக்கோரிக்கைகளை வலியு றுத்தி அக்டோபர் 25-ம் தேதி சட்டப்பேரவை முன்பாக ஏஐடியூசி மாநில குழு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ம்தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்