புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் படுகை அணை கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016-ம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணை சேதமடைந்தது. அப்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில் செல்லிப்பட்டு படுகை அணையில் தண்ணீர் வழிந்தோடி யதால் அப்பகுதி திடீர் சுற்றுலா தலமாக மாறியது. ஏராளமான மக்கள் குவிந்தனர். அதைத்தொடர்ந்து பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகபடுகை அணையில் மேலும் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல ஆயிரம்கன அடி தண்ணீர் வெளியேறியது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள்,விவசாயிகள் கூறுகையில்,
“இந்த அணையை சீர்செய்து தரசெல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம் உட்படஇருபது கிராம மக்கள் அரசிடம் மனு அளித்தோம். மழைக் காலங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்குகிறார்கள். தற்போது 60 சதவீதம் வரை அணை சேதமடைந்துவிட்டது. 6 மாதங்கள் வரை தேங்கியிருக்க வேண்டிய தண்ணீர் தற்போது வழிந்தோடி விட்டது. 20 கிராமங்களின் நிலத்தடி நீர் உயரவும், விவசாயத்துக்கு உதவும் இந்த படுகை அணையை சீர்செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனர். கடும் மழைப்பொழிவு இனிமேல் தான் இருக்கும். அதிக தண்ணீர் வரத்து இருந்தால் இந்த அணை இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. அணை உடைந்தால் 20 கிராமங்களில் விவசாயம், குடிநீர் முற்றிலும் பாதிக்கப்படும்” என்றனர்.
அதேநேரத்தில் சங்கராபரணி ஆற்றில் செட்டிப்பட்டு - திருவக்கரை இடையே கட்டப்பட்டுள்ள புதிய படுகை அணை முழுமை யாக நிரம்பி வழிகிறது. பருவமழை தீவிரமடைவதற்கு முன்பே படுகை அணை நிரம்பியுள்ளதால் செட்டிப்பட்டு, திருவக்கரை விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், “தற்போதே தண்ணீர் நிரம்பி வழிவதால் 10 கிராமங் களில் நிலத்தடி நீர்மட்டம் நன்கு உயர்ந்துள்ளது. விவசாயமும் நன்றாக நடக்கிறது. தடுப்பணையை உயர்த்தி தந்தால் இன்னும் பலன் அதிகரிக்கும்” என்றனர். படுகை அணையில் நீர் நிரம்பியுள் ளதால் அதனை காண பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் அணையை ஒட்டி சிலர் மது அருந்திவிட்டு படுகை அணையில் இருந்து தண்ணீர் வழியும் இடத்தில் பாட்டில்களை உடைத்துவிட்டு செல்வதால் மக்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago