விருதுநகர் மருத்துவ கல்லூரியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

By செய்திப்பிரிவு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட அனுமதி கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து, விருது நகரில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர்.

மருத்துவக் கல்லூரி வளாகத்தை பசுமையாக பராமரிப்பதற்காக, கல்லூரி நிர்வாகத்துடன் ராம்கோ நிறுவனம் இணைந்து 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். சீனிவாசன் எம்.எல்.ஏ., டீன் சங்குமணி, செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர். நேற்று 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்