கிருஷ்ணகிரி அணையில் இருந்துநீர் திறப்பு 1635 கனஅடியாக அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

தென்பெண்ணையாற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப் பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவைப் பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1577 கனஅடியாக இருந்தது.

நேற்று காலை நீர்வரத்து 1571 கனஅடியாக சரிந்தது. அணையில் 50.70 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் அணையில் இருந்து 3 சிறிய மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் 1458 கனஅடி தண்ணீரும், வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்கள் வழியாக பாசனத்துக்கு 177 கனஅடி தண்ணீரும் என மொத்தம் விநாடிக்கு 1635 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் திறக்கப்படும் உபரி நீர், நெடுங்கல் தடுப்பணை வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்குச் செல் கிறது.நெடுங்கல் தடுப்பணையில் இருந்து பாரூர் பெரிய ஏரிக்கு விநாடிக்கு 43 கனஅடி தண்ணீர் செல்கிறது.

தற்போது பாரூர் ஏரியின் முழு கொள்ளளவான 15.40 அடிக்கு தண்ணீர் உள்ளதால், ஏரியில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் வழியாக இணைப்பு ஏரிகளுக்கு விநாடிக்கு 43 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் போச்சம்பள்ளி அருகே கோணணூர் ஏரி நிரம்பி, கால்வாய் வழியாக திருவயலூரை கடந்து பெனுகொண்டாபுரம் ஏரிக்குச் செல்கிறது. இதனால் போச்சம் பள்ளி, மத்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்