சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீரை திறந்து - சில்லறையாக விற்பனை செய்த குடோனுக்கு சீல் வைப்பு :

தூத்துக்குடியில் சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீரை திறந்து சில்லறையாக விற்பனை செய்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ச. மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த குடோனில், சுத்திகரிக்கப்பட்டு 20 லிட்டர் கேன்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை, கேன்களைத் திறந்து சில்லறையாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும், அந்தக் கடை உணவு பாதுகாப்புத் துறையின் உரிமமின்றி செயல்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

பொதுமக்கள் கடைகள், பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களில் விற்கப்படும் உணவில் உள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் குறித்தும், விதிமீறல் குறித்தும், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களின் விற்பனை குறித்தும், உரிமமின்றி செயல்படும் கடைகள் குறித்தும் 94440 42322 என்ற மாநில வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

குடோனில், சுத்திகரிக்கப் பட்டு 20 லிட்டர் கேன்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை, கேன்களைத் திறந்து சில்லறையாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்