ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் எஸ்.ராஜன், உதவி இயக்குநர் ஆண்டனிசுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
தூத்துக்குடி ஸ்பிக் ஆலையின் சார்பில், நாள் ஒன்றுக்கு 170 சிலிண்டர் தயாரிக்கும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். ஸ்பிக் ஆலையின் முழுநேர இயக்குநர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன், முதன்மை செயல் அதிகாரி இ. பாலு, துணைப் பொது மேலாளர் செந்தில் நாயகம், முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago