சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் - சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் : அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 9-வது வட்ட கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 9-வது வட்ட கிளை மாநாடு அரசு ஊழியர் சங்க கட்டிட கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.அன்பழகன் சிறப்புறையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல், தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வீரக்குமார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன், தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE