வேளாண் ஏற்றுமதி கலந்துரையாடல் கூட்டம் :

தென் மாவட்டங்களில் வேளாண் ஏற்றுமதியை துரிதப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பதற்கான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் கூட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.

கல்லூரி முதல்வர் மு.இறைவன் அருட்கனி அய்யநாதன் வரவேற்றார். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு மைய இயக்குநர் மு.சு.அசோக் பேசும்போது, ``பொருட்களின் உற்பத்தி செலவை குறைப்பதன் மூலமும், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலமும் ஏற்றுமதி சந்தையில் நிறைந்த லாபத்தை பெற முடியும்” என விளக்கினார்.

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் பேசும்போது, ``விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வேளாண் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் மற்றும் நவீன தொழில் நுட்பங்கள்மற்றும் ஏற்றுமதி தர நிர்ணயங்களை பற்றி அறிந்து கொள்வது அவசியம்” என்றார்.

டெல்லி வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவர் ஆ.அங்கமுத்து, கோயம்புத்தூர் வேளாண் வணிக மேம்பாட்டு மைய இயக்குநர் சே.த.சிவகுமார், துணை பொதுமேலாளர் சு.ரவீந்திரா, தமிழ்நாடு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல பொறுப்பாளர் ஷோபனா குமார் ஆகியோர் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்