வேலூர் நறுவீ மருத்துவமனையில் - உலக அவசர சிகிச்சை தின கருத்தரங்கம் :

By செய்திப்பிரிவு

வேலூர் நறுவீ மருத்துவமனையில் உலக அவசர சிகிச்சை தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் பல்வேறு மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

வேலூர் நறுவீ மருத்துவ மனையில் உலக அவசர சிகிச்சை தின கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு, மருத்துவ மனையின் செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி தலைமை தாங்கினார். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை துறை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், பல்வேறு மருத்துவ மனைகளின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

‘வயது வந்தோருக்கான விபத்து அவசர சிகிச்சை’ என்ற தலைப்பில் டாக்டர் பொன்னிலவன், ‘குழந்தைகளுக்கான விபத்து அவசர சிகிச்சை’ என்ற தலைப்பில் டாக்டர் அரவிந்த், ‘கண்ணுக்கு புலப்படாத அவசர சிகிச்சை’ என்ற தலைப்பில் டாக்டர் ஷைனிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில், நலம் மருத்துவமனை டாக்டர்கள் அசோக், நர்மதா அசோக், மணிசுந்தரம் மருத்துவ மனை டாக்டர் மணிவண்ணன், தான்யா மருத்துவமனை டாக்டர் தானேஷ் பிரசாத்,  ராகவேந்திரா மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் கோபிநாத் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். நறுவீ மருத்துவமனையின் மருத்துவ சேவை துறையின் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்