கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 இடங்களில் காவல்துறை சார்பில் நடந்த மாபெரும் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 208 புகார்கள் முடித்து வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் காவல்துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம் கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங் கரை ஆகிய உட்கோட்டங்களில் நடைபெற்றன. அதன்படி, ஓசூரில் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் ஓசூர் ஏஎஸ்பி., முகாம் அலுவலகத்திலும், தேன்கனிக்கோட்டையில் ஏடிஎஸ்பி., விவேகானந்தன், டிஎஸ்பி., கிருத்திகா தலைமையில் சீனிவாசா திருமண மண்டபத் திலும், பர்கூரில் டிஎஸ்பி, தங்கவேல் தலைமையில் பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பும், ஊத்தங்கரையில் டிஎஸ்பி. அலெக்சாண்டர் தலைமையில் வாரி திருமண மண்டபத்திலும் நடைபெற்ற குறைதீர் முகாமில் மக்கள் ஏராளமான மனுக்களை அளித்தனர்.

கிருஷ்ணகிரி நகர காவல் நிலையம் முன்பு நடைபெற்ற முகாமில் டிஎஸ்பி., சரவணன் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் புகார் மனுக்களைப் பெற்றனர்.

மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்களிலும் மொத்தமாக, 253 புகார்கள் பெறப்பட்டன. கிருஷ்ணகிரி கோட்டத்தில் 85 மனுக்களில் 72-க்கும், ஓசூர் 41-ல் 38, பர்கூர் 37-ல் 29, தேன்கனிக்கோட்டை 36-ல் 32, ஊத்தங்கரை 54-ல் 37 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, மொத்தமாக 208 புகார்கள் முடித்து வைக்கப் பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்