திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்குமாறு ஆட்சியர் ச.விசாகன் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரத்தில் ரூ.59.8 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது. இதை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், ப.வேலுச்சாமி எம்.பி. ஆகியோர் பாலம் கட்டும் இடத்தை நேற்று நேரில் பார்த்தனர். பின்னர் ஆட்சியர் ச.விசாகன் கூறியதாவது:
பாலம் கட்டும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் தொடர்புடைய பணிகள் மற்றும் மீதம் உள்ள பாலப் பணிகளை கூடுதல் தொழிலாளர்களை நியமித்து வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்குமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் லதா, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago