செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் :

By செய்திப்பிரிவு

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி யில் பலத்த போலீஸ் பாது காப்புடன் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. துணைத் தலைவராக அர்ஜுனன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மொத்தம் 15 உறுப்பினர்களில் காலியாக இருந்த 2 உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே கடும் போட்டி நிலவியது. இதனால் திண்டுக்கல் எஸ்.பி வி.ஆர்.சீனிவாசன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 6-வது வார்டு உறுப்பினர் அர்ஜுனன், 15-வது வார்டு உறுப்பினர் கணேசன் ஆகியோர் துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதனிடையே தேர்தலை தள்ளி வைக்குமாறு கணேசன் தேர்தல் அலுவலரிடம் கோரினார். இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து கணேசனின் ஆதரவு உறுப்பினர்கள் 6 பேர் தேர்தலை புறக்கணித்து வெளியேறினர்.

இதையடுத்து ஊராட்சித் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் அனைத்து வாக்குகளையும் அர்ஜுனன் பெற்றதையடுத்து துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் மலரவன் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்