முதியவரிடம் ஏடிஎம் எண்ணை பெற்று - ஆன்லைன் மூலம் ரூ. 50 ஆயிரம் பறிப்பு :

By செய்திப்பிரிவு

பரமக்குடியைச் சேர்ந்த முதியவரிடம் மொபைலில் பேசி ஏடிஎம் கார்டு எண்ணை பெற்று ரூ. 50,000 மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகே, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஹனீபா(82). இவரது மொபைல் போனுக்கு கடந்த 19-ம் தேதி மாலை இந்தியன் வங்கியின் மேலாளர் பேசுவதாகக் கூறி ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது அவர் உங்கள் ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டதாகக் கூறி கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்டுள்ளார்.

இதை நம்பிய ஹனீபா ஏடிஎம் எண்களை தெரிவித்தார். உடனே அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2 தவணையாக ரூ. 25,000 வீதம் ரூ. 50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.

இதுகுறித்து ஹனீபா எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்