தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் - ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் :

By எஸ். முஹம்மது ராஃபி

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகை யில் ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரத்துக்கு ஆண்டுக்கு சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் மதுரை மற்றும் திருச்சி மார்க்கமாக பேருந்து மற்றும் ரயிலில் வருகின்றனர். விமானம் மூலம் வருபவர்கள் விமானத்தில் மதுரை வரை வந்து பின்னர் 170 கி.மீ தூரத்தை 4 மணி நேரம் கார் அல்லது இதர வாகனங்களில் பயணம் செய்து ராமேசுவரம் வர வேண்டியுள்ளது. இதனால் பெருமளவில் நேர விரயம் ஆகிறது. எனவே ராமநாதபுரம் பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்டகால வேண்டுகோளாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையின் போது முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ராமேசுவரத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ரூ.1 கோடியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் அறிவித்திருந்தார்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி கள் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் ராமேசு வரத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு இந்த நிலத்தை ஆலோசனைக்குழு தல ஆய்வு மேற்கொண்டுள்ளது.

மேலும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங் களை செயல்படுத்துவது தொடர் பாக சென்னையில் உள்ள சுற்றுலாத் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ராமேசுவரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்த அமைச்சர் மதிவேந்தன் கோரியுள்ளார்.

அரசு நிதி ஒதுக்கியதும் ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணிகள் தொடங்கும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்