திண்டுக்கல் மாவட்ட அனைத்து தெருவோர வியாபாரத் தொழிற் சங்கத்தினர் மணிக்கூண்டில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கு சங்க நிர்வாகி செல்வகணேசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் பாலன், தலைவர் சந்திரமோகன் ஆகியோர் பேசினர்.
தெருவோர வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். காவல் துறையினர் வியாபாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். அனைவருக்கும் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago