கொடைக்கானல் போட் கிளப் அலுவலக சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், குத்தகை காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், ஏரியில் போட் கிளப் சார்பிலும், தனியார் ஓட்டல் நிறுவனம் சார்பிலும் நடத்தப்படும் படகு சேவைக்கு தடை விதிக்க வேண் டும். ஏரியில் படகுகளை இயக்க பொது டெண்டர் நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, படகு சேவை நடத்த தடை விதித்தும், ஏரியில் உள்ள போட் கிளப் கட்டிடத்துக்கு சீல் வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளி சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. போட் கிளப் தரப்பில், படகு சவாரி நடத்தவும், போட் கிளப் செயல்படவும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் போட் கிளப் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொடைக்கானல் போட் கிளப் அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். போட் கிளப்பை திறக்கவும், படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடரும் என உத்தரவிட்டு, விசாரணையை அக். 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago