மதுரை மண்டலத்தில் - ரூ.20 கோடிக்கு விற்பனை செய்ய கோ-ஆப்டெக்ஸ் இலக்கு :

By செய்திப்பிரிவு

மதுரை மண்டலத்தில் உள்ள 17 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலை யங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.20 கோடிக்கு கைத்தறி துணிகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ச.விசாகன் விற்பனையை தொடங்கி வைத்து கூறியதாவது:

தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மதுரை மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 17 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.20 கோடிக்கு கைத்தறி துணி களை விற்பனை செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மூன்று விற்பனை நிலையங் களின் விற்பனை குறியீடாக முறையே ரூ.2.45 கோடி நிர்ணயிக் கப்பட்டுள்ளது. திண்டுக்கல் விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.69.61 லட்சம். நடப்பு ஆண்டு விற்பனை குறியீடாக ரூ.1.20 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மோகன்குமார், மேலாளர்கள் நாகராஜன், ஞானப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்