புளியரை ஊராட்சி துணைத் தலைவர் - தேர்தல் நிறுத்திவைப்பு : அதிமுக எம்எல்ஏ தலைமையில் மறியல்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நேற்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இந்த பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த சரவணன், திமுகவைச் சேர்ந்த குருமூர்த்தி ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது. அதிமுகவைச் சேர்ந்த உறுப் பினர்கள் வாக்களிக்கச் சென்ற போது, அவர்களை திமுகவினர் தடுத்து நிறுத்தியதாகவும், பெண் ஒருவரின் சேலையைப் பிடித்து இழுத்து தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. பதற்றமான சூழ்நிலை நிலவியதால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடைய நல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் அதிமுகவினர் கேரளா செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தேர்தலை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்