திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக 22 வயது இளம் பொறியியல் பட்டதாரி லேகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 20-ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்.
மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக லேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக வார்டுகள் கொண்டது இந்த ஊராட்சி ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 25 ஊராட்சி வார்டுகளில் திமுக கூட்டணி 16 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் பாஜக ஓரிடத்திலும் சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவை சேர்ந்த லேகா தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘‘என்னுடைய பணி காலத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன்’’ என்று அவர் தெரிவித்தார். இவரது தந்தை அன்பழகன் மானூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago