கனமழையால் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பகுதியில் நேற்று மாலை கனமழை பெய்தது. அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. அதேபோல் திருமூர்த்தி மலையில் உள்ள அருவி பகுதியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால், அணைக்கு செல்லும் தண்ணீர் வேகம் அதிகரித்தது. அதேபோல் கோயில்உள்ள பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால், பக்தர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில்போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் தரைப்பாலமும் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது.
உதகை
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை கூடலூர், பந்தலூர், தேவர்சோலை, உப்பட்டி, சேரம்பாடி, பாட்டவயல், நடுவட்டம்,ஓவேலி பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழை நேற்று அதிகாலை வரை பெய்து கொண்டே இருந்தது. தொடர் மழையால் பாண்டியாறு, புன்னம்புழா, மாயாறுஉள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 55 மி.மீ., மழை பதிவானது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago