கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் செலவு கணக்கினை முறைப்படி உரியபடிவத்தில் பராமரித்திட மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அவ்வாறு பராமரிக்கப் பட்ட கணக்கின் உண்மை நகலினை தேர்தல் முடிவு அறிவிக் கப்பட்ட 30 நாட்களுக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர்கள் மாவட்ட ஊராட்சி செய லரிடமும், ஊராட்சி ஒன்றிய வார்டுஉறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) மற்றும் ஆணையரிடமும் தாக்கல் செய்ய வேண்டும்.
போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை தொடர்புடைய அலுவலர்களிடமிருந்து தேர்தலில் போட்டியிட்ட மற்றும் போட்டியின்றி தேர்வுபெற்ற வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு ஊராட் சிகள் சட்டம் பிரிவு 37(4)ன் படி தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3 ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆக்கப்படுவார்கள்.
எனவே, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உரிய காலக்கெடுவிற்குள் செலவு கணக்கினை தாக்கல் செய்திடவேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago