கடலூரில் மழைக்கால பாதிப்பை எதிர்கொள்ள தயாராவோம் : மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐயப்பன் எம்எல்ஏ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கடலூர் மாநகராட்சி பகுதி 45 வார்டுகளை கொண்டது. பருவமழை காலம் தீவிரம டைந்துள்ள நிலையில் புயல், மழை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் அடிப் படைத் திட்டங்கள் விரைந்து முடித்திட மாநகராட்சியில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிபேசிய தொகுதி எம்எல்ஏ ஐயப்பன் மாந கராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந் தார். பின்னர் அவர் கூறுகையில், "கடலூர் மாநகராட்சியில் அடிப்படை தேவையான குடிநீர் தங்குதடையின்றி கிடைத்திட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பு உள்ளிட்ட புகார்கள் பெறப்படும் நிலையில் அதனை சீர்செய்ய போர்கால அடிப்படை யில் நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். அடிப்படை திட்டங்கள் நகரில் முழுமை யாக விரைந்து முடித்திட வேண்டும். சுத்தமான, சுகாதாரமான நிலையை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியை மேம்படுத்திட வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகள் மழைக்காலத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்கிட வேண்டும். நகரில் சுற்றி திரியும் பன்றிகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தடையின்றி செயல்படவும் அதனை பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு இல்லாதவகையில் அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள், அலுவலர்கள் முதல்வரின் சிறப்பான செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கடலூர் பெருநகராட்சி சிறந்த மாநகராட்சியாக அமைய பணியாற்ற வேண்டும் என்றார்.

நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார். நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, நகர கட்டமைப்பு அதிகாரி முரளி. கூட்டுறவு சங்கத் தலை வர் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்