மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழில் பாதிப்பு : அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை

மூலப்பொருட்கள் விலை உயர்வால் அட்டைப்பெட்டி உற்பத்தி தொழில்பாதிக்கப்பட்டுள்ளது. அட்டைப்பெட்டிஉற்பத்தி விலை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக, தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க அவசரஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

கோவை மண்டல தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேஷ், பொருளாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப்பின் அட்டைப்பெட்டிஉற்பத்தியாளர் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அட்டைப்பெட்டி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளானகாகிதத்தின் விலை தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. இதற்கு, காகிதஉற்பத்திக்கு தேவையான நிலக்கரியின்விலை உயர்வே காரணமாகும். ஏற்கெனவே காகித விலை 30 சதவீதம்உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும்15 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகவிலைக்கு காகிதத்தை வாங்கி அட்டைப்பெட்டி உற்பத்தி செய்வதில் பல்வேறுசிரமங்கள் உள்ளன. மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில்இருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், அட்டைப் பெட்டியின் விலையை 20 சதவீதம் உயர்த்த வேண்டியகட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களது விலையேற்றத்தை ஏற்றுமதியாளர்கள் ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏற்றுமதியாளர்கள் பில் தொகையை 15 முதல் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE