ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் சார்பில் - வன்னியனூர் அரசுப் பள்ளிக்கு சுகாதாரக் கழிப்பறை கட்டிடம் :

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் சேலம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வன்னியனூர் அரசுப் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

நிலையான நீர் மேலாண்மை, அனைவருக்கும் சுகாதாரக் கழிப்பிட வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் சேலம் ஒர்க்ஸ் நிறுவனம் அரசுப் பள்ளிகள் மற்றும் கிராமங்களில் சுகாதாரமான கழிப்பிடங்களை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துகிறது.

ஜேஎஸ்.டபிள்யூ ஸ்டீல் சேலம் ஒர்க்ஸ் நிறுவனம் இதுவரை அரசுப் பள்ளிகளில் 23 கழிப்பறைகளை கட்டியுள்ளது. இதேபோன்று சிறப்பு குழந்தைகள் பயிலும் மேச்சேரி மற்றும் நங்கவள்ளி பள்ளிகளிலும் கழிப்பிடம் கட்டி கொடுத்துள்ளது.

நடப்பாண்டில் ஜேஎஸ்டபிள்யூ அறக்கட்டளை மூலமாக குள்ளமுடையனூர், வன்னியனூர், வெள்ளார் ஆகிய 3 அரசுப் பள்ளிகளில் ரூ. 27 லட்சம் மதிப்பில் சுகாதாரக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 217 குழந்தைகள், 57 சிறப்பு குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், ஜேஎஸ்டபிள்யூ-வின் சிஎஸ்ஆர் துறை மூலம் வன்னியனூர் அரசுப் பள்ளியில் கட்டப்பட்ட கழிப்பிடக் கட்டிடத்தை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத் தலைவர் பிஎன்எஸ் பிரகாஷ்ராவ் திறந்து வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்