பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க - நீளமான பத்தி தயாரிப்பு பணி ஈரோட்டில் தீவிரம் :

By செய்திப்பிரிவு

தீபாவளி பட்டாசு வெடிக்க பயன்படுத்தப்படும் நீளமான பத்தி உற்பத்தி ஈரோட்டில் தீவிரமாக நடந்து வருகிறது.

தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியின்போது வெடிக்கும் வகையிலான பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க நீளமான பத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. பத்திகள் தயாரிக்கும் பணி ஈரோடு கனிராவுத்தர் குளம், பச்சிப்பாளிமேடு, பழைய ரயில் நிலைய சாலை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது.

இப்பணியில் ஈடுபட்டுள்ள ஈரோடு பச்சைப்பாளிமேடு பகுதியைச் சேர்ந்த சாதிக் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும், பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க 2.5 அடி நீளமுள்ள பத்தி தயாரித்து, தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம். கடந்த ஆண்டு நான்கு லட்சம் பத்திகளை தயாரித்து விற்பனை செய்தோம்.

கரோனா ஊரடங்கு மற்றும் மூலப்பொருள் தட்டுப் பாட்டால், இந்த ஆண்டு பத்தி தயாரிப்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மொத்த விற்பனையில் ஒரு பத்தி, ரூ 3 முதல் 3.50 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்தோம். இந்தாண்டு கரித்துாள், மரத்துாள், தென்னங்குச்சி என மூலப்பொருள் விலை உயர்ந்துள்ளதால், ஒரு ரூபாய் அதிகரித்து ரூ 4.50-க்கு விற்பனை செய்ய உள்ளோம். இதனை குடிசைத்தொழிலாக செய்வதால், அதிகமாக செய்து இருப்பு வைக்க இயலாது.

கரித்துாள், மரத்துாளைக் கொண்டு செய்யப்படும் இந்த பத்தி ஆறு மணி நேரம் எரியக்கூடியதாகும். கடைகளில் இதனை எட்டு முதல் பத்து ரூபாய்க்கு விற்கின்றனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்