விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள் ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த 12-ம் தேதி வெளியான பின்பு 14 ஒன்றியங்களில் 298 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என 6,097 பேர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
விழுப்புரம் ஆட்சியர் பெருந் திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 28 மாவட்ட ஊராட்சி வார்டுஉறுப்பினர்கள் நேற்று பதவியேற் றனர். அமைச்சர் பொன்முடி மற் றும் ஆட்சியர் மோகன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களான திமுக வைச் சேர்ந்த சாந்தி, செல்வி, அன்புசெழியன், சசிகலா, மகேஸ் வரி, விஜயன்,மனோசித்ரா, எழிலரசி, புஷ்பவள்ளி, அகிலா, ஏழுமலை, பிரபு, ரவிச்சந்திரன், ராஜீவ்காந்தி, முருகன், சிவகுமார், ஜெயசந்திரன், மீனா, பிரேமா, கௌதம், அன்புமணி, தமிழ் செல்வி, வனிதா, விஸ்வநாதன், சந்திரசேகரன், பனிமொழி, அதிமுகவைச் சேர்ந்த நித்தியகல்யாணி, விசிகவைச் சேர்ந்த ஷீலாதேவி ஆகிய 28 பேர் நேற்று காலை 10 மணிக்கு பதவியேற்றனர். எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள் நாளை (22ம்தேதி) பொறுப்பேற்க உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர்களையும் திமுக கைப்பற்றிய நிலையில், அவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பதவி ஏற்றனர்.மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சு.தேவநாதன் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் மஞ்சுளா முன்னிலையில் பா.அஸ்வினி, சு.சுகன்யா, ரா.அமிர்தம், கு.ராஜேந் திரன், கு.கோவிந்தராஜூ, ல.ஜெய சங்கர், மு.தங்கம், அ.அகிலாபானு, மு.முருகேசன், சி.அலமேலு, ம.வேல்முருகன், ச.கலையரசி, பெ.புவனேஸ்வரி, அ.பழனியம்மாள், ரா.ராஜேஸ்வரி, பா.பிரியா, சா.அமுதா, வெ.சுந்தரமூர்த்தி, ஜி.ஆர்.வசந்தவேல் ஆகி யோர் பதவிஏற்றனர். இந்நிகழ்ச்சி யில் திமுக முக்கிய பிரமுகர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த குமராட்சி ஒன்றியம் 19 வது வார்டு த.சங்கர், பண்ருட்டி ஒன்றியம் 2-வது வார்டு ஜெ.ஜெயப்பிரியா, மேல்புவனகிரி ஒன்றியம் 11- வது வார்டு ஜெ.கார்த்திகேயன், விருத்தாசலம் ஒன்றியம் 7 வது வார்டு ம.சாந்தி, முஷ்ணம் ஒன்றி யம் 10-வது வார்டு ந.எழிலரன் ஆகியோர் நேற்று பதவியேற்றனர்.இது போல 10 ஊராட்சி மன்றத்தலைவர்கள், 31 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago