மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்லில் - கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப் படுத்தக் கோரி சிஐடியூ கட்டு மானத் தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.சுப்பையா தலைமையும் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையும் வகித்தனர். இதில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாநிலப் பொருளாளர் லூர்துரூபி, சிஐ டியூ மாவட்ட துணைத் தலைவர் சந்தியாகு ஆகியோர் பேசினர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட நலவாரிய அலுவலகம் முன் காமராஜர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப் பாட்டத்துக்கு மாவட்டத் தலை வர் மாரியப்பன் தலைமை வகித் தார். நிர்வாகிகள் சரவணன், சந்தானம், பெரியசக்கரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தேனி

தேனி தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகம் முன் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் பி.பிச்சைமணி தலைமை வகிக்க, சங்க நிர்வாகிகள் இ.தர்மர், ஆர்.கே.ராம், சி.ராஜாமணி, ஏ.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிஐடியூ மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். கட்டு மானத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.சண்முகம், சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளர் டி.ஜெயபாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இயற்கை மரணத் துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

திண்டுக்கல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமானத் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் தீத்தான், புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்