அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக். 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்தநாள் விழா மற்றும் 59-வது குருபூஜை விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.
அதையடுத்து, அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: வரும் 30-ம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளார். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமுதாய அமைப்புகளை சேர்ந்தோர் பங்கேற்க வருவர் என்பதால் முன்னேற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில் அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு போதிய பேருந்து வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago