திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத் தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு ரூ.10.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நீடாமங்கலம் ரயில் பாதை செல்கிறது. திருவாரூர், மன்னார்குடியில் இருந்து 15-க் கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் நீடாமங்கலத்தின் வழியாக செல்கின்றன. இதனால், தினமும் 20-க்கும் அதிகமான முறை ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண் டும் என கடந்த 10 ஆண்டுகளுக் கும் மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து, தமிழக முதல்வர், அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். இதன் பலனாக நீடாமங்கலம் மேம்பால கட்டுமானப் பணிக்கு ரூ.10.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு ஏற்கெனவே அறிவித்திருந்தார். மேலும், அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் கடிதம் மூலம் இத்தகலை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று, பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago