தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம், திமுகவைச் சேர்ந்த தலைவர் உஷா புண்ணியமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், இடைத்தேர்தலில் 16-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் ராதிகா பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர், கூட்டம் தொடங்கி யதும், திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், “வளர்ச்சித் திட்டங்களில் உறுப்பினர்களுக் கான நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைதன்மை இல்லை, பாரபட்சம் காட்டப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யாததால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன” என குற்றஞ் சாட்டினர்.
மேலும், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, தன்னிச்சையாக பல முடிவுகளை எடுப்பதுடன், நிதி ஒதுக்கீடு செய்ய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தும், எந்தவித பதிலும் அளிக்காமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது என கூறி, திமுக உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, பேசிய உஷா புண்ணியமூர்த்தி, நிதி பற்றாக் குறையால் வார்டு உறுப்பினர் களுக்கு தேவையான அளவு நிதியை ஒதுக்கீடு செய்ய முடிய வில்லை. மேலிடத்தில் நிதியை அதிகமாக ஒதுக்கீடு செய்ய கேட்டுள்ளோம். கடந்த முறை ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 28 வார்டு உறுப்பினர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் வெளிநடப்பு செய்த உறுப்பினர்களை, தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் சமரசம் செய்ததால், அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago