திருவண்ணாமலை மாவட்டத்தில் - ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு :

தி.மலை மாவட்டத்தில் 65 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

தி.மலை மாவட்டத்தில் காலியாக இருந்த 66 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இதற்கான மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் 5 கிராம ஊராட்சி தலைவர்கள், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 31 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கூனம் பாடி கிராம ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிட மனுத் தாக்கல் செய்யாததால் தேர்தல் நடைபெறவில்லை.

மீதமிருந்த 34 பதவிகளுக்கு தேர்தல் நடத்தபட்டு கடந்த 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர் களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. இதில், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் 10-வது வார்டு கவுன்சிலராக என்.வி.பாபு, பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் 12-வது வார்டு கவுன்சிலராக லட்சுமி, புதுப் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் 11-வது வார்டு கவுன்சிலராக லட்சுமி ஆகியேர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண் டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE