திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க செயலாளர் கே.ரங்கராஜ்விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருப்பூர் மாநகராட்சி, உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் நகராட்சிகள்மற்றும் புதிதாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி,பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களாகவும், ஓட்டுநர்களாகவும், குடிநீர் ஏற்ற பணியாளர்களாகவும், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்களாகவும் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது. எனவே தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணி நியமனம் செய்துள்ள ஒப்பந்ததாரர்கள், மேற்படி தொழிலாளர்களுக்கு உரிய போனஸ் தொகையை சட்டப்படி வழங்க வேண்டும். இதற்கு அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago