இந்திய இயற்கை யோகா மருத்துவச் சங்கம், தமிழ்நாடு சமூக உரிமைகள் அமைப்பு ஆகியவை இணைந்து, மதுரை கே.கே.நகரில் இயற்கை யோகா மருத்துவ ஆரோக்கிய சிகிச்சையகம் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் பி.மூர்த்தி இயற்கை யோகா மருத்துவமனையைத் திறந்துவைத்து பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தலைமை வகித்தார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கச் செயலாளர் ச.மாரியப்ப முரளி, தமிழ்நாடு சமூக உரிமைகள் அமைப்பு மாநிலத் தலைவர் எஸ்.கணேசன் முன்னிலை வகித்தனர்.
இயற்கை மருத்துவர் ம.ஓவியா வரவேற்றார். மாவட்ட நீதிபதி என்.உமாராணி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொழில் முனைவோர் துறை இயக்குநர் என்.பிரசன்னா, இந்திய இயற்கை யோகா மருத்துவ சங்கத் தலைவர் பி.சவுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தொல்திருமாவளவன் எம்பி பேசியதாவது: மத்திய அரசு இயற்கை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இயற்கை மருத்துவர்களுக்கான வாரியம் அமைக்க வேண்டும். மத்திய இயற்கை யோகா மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் இத்துறை மருத்துவர்கள், தொழில் முனைவோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும். பள்ளி, கல்லூரி, உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து இயற்கை மருத்துவம்m யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago