தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தனியார் பேருந்துகளில் பண்டிகைக் கால நெரிசலைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் பெயர்களை குறிப்பிட்டு புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 2,900 கேமரா பொருத்தப்படுகிறது. அரசு பேருந்துகளில் தவறுகள் நிகழாமல் தடுக்கும் நோக்கத்தில் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தப்படுகிறது.
சென்னையை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago