ஜருகுமலை சாலை பணியை ஆய்வு செய்ய வேண்டுகோள் :

By செய்திப்பிரிவு

சேலம் பனமரத்துப்பட்டிக்கு உட்பட்ட ஜருகுமலை மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணியை ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன், முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரால்நத்தம் ஊராட்சி ஜருகுமலை செல்லும் மலைப்பாதை நபார்டு வங்கியின் மூலம் ரூ.7.20 கோடி கடன் உதவியுடன் ரூ.9 கோடி மதிப்பீட்டில் பனங்காடு முதல் ஜருகுமலை வரை சாலை அமைக்கப்பட்டது. மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.38.25 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவருடன் சிறு பாலம் அமைக்கும் பணி நடந்துள்ளது.

இச்சாலையானது தரமின்றியும், தடுப்பு சுவர்கள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டு விபத்து நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இச்சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமற்ற சாலைகளை செப்பனிடவும், பழுதடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தரமற்ற சாலை அமைத்தவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்