அரியலூர் அருகே இளைஞர் தொல்லை கொடுத்ததால் விரக்தி அடைந்து பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முன்பே புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்(22). இவர் அதே ஊரில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவருக்கு, தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அதற்கு உதவி செய்யுமாறும் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு அந்த மாணவி மறுத்துவிட்டார். இது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, கயர்லாபாத் காவல்நிலையம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய மண்டல காவல்துறை தலைவர், முதல்வர் தனிப்பிரிவுக்கு அந்த மாணவி புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதனிடையே வேல்முருகன் தனது நண்பர்கள் சிலருக்கு, மாணவியின் செல்போன் எண்ணை கொடுத்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன முடைந்த அந்த மாணவி நேற்று முன்தினம் இரவு விஷம் குடித் துள்ளார்.
இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று உயிரிழந்தார்.
இதனிடையே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தனது மகள் உயிரிழந்ததாகவும், நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்தும், இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும் அரியலூர் அண்ணா சிலை அருகே மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த அரியலூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago