பட்டாசு கடைக்கு தற்காலிக உரிமம் :

திருவண்ணாமலை/திருப்பத்தூர்: திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே வரும் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இந்த வழிமுறைகள், நிரந்தர பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் கோருபவர்கள் மற்றும் ஆண்டு உரிமம் புதுப்பித்தலுக்கு பொருந்தாது. பொது மக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்துள்ள இடத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடந்தாண்டு உரிமம் பெற்றவர்கள், அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE