நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் மறியல் :

செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துள்ளது. ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களாக இது செயல்படாமல் இருப்பதால், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் களத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிகாரிகள் 'நெல் கொள்முதல் செய்ய சாக்குப் பைகள் வரவில்லை' எனக்கூறி காலதாமதம் செய்ததாகத் தெரிகிறது. இதன் பின்னர், 'அரசு எங்களுக்கு அறிவித்திருந்த அளவுக்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டோம். இனி இங்கு நெல் எடுக்க முடியாது' என்றும் கூறியதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் இவர்களை நம்பி நாங்கள் களத்தில் நெல்லை கொட்டி வைத்தோம். அவை மழையில் நனைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் மையத்தில் எங்கள் நெல்லை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர் என்று குற்றம்சாட்டி மதுராந்தகம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE