மதுரை மாட்டுத்தாவணி ‘ஸ்மார்ட் சிட்டி’ பழ மார்க்கெட்டில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை யொட்டி பழ வியாபாரம் எதிர்பார்த்ததுபோல இல்லாததால் டன் கணக்கில் சாத்துக்குடி பழங்கள் அழுகி வீணாகின.
கடந்த வாரம் நடந்த ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைக்காக வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை பழங்களையும் கொள்முதல் செய்து மாட்டுத் தாவணி பழ மார்க்கெட்டில் விற்பனைக்காக வைத்திருந்தனர்.
ஆனால், பண்டிகைக்கால வியாபாரம் கடந்த ஆண்டுபோல இல்லை. அடுத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பழங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஸ்மார்ட் சிட்டி பழ மார்க்கெட்டில் அனைத்துவகை பழங்களும் டன் கணக்கில் தேங்கின. அதனால் தேங்கிய பழங்கள் அழுகத் தொடங்கின. நேற்று வியாபாரிகள் 10 டன் எடையுள்ள ஒரு லாரி சாத்துக்குடி பழங்களை மார்க்கெட் எதிரே உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டினர்.
மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், அந்த பழங்களை குப்பை லாரியில் ஏற்றினர். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி வியாபாரிகள் கூறிய தாவது: சாத்துக்குடி கிலோ ரூ.45-க்கு விற்கிறது. தோட்டங்களிலேயே வியாபாரிகள் ரூ.40 முதல் ரூ.42-க்கு விவசாயிகளிடம் கொள் முதல் செய்கின்றனர். அதனால், விலை வீழ்ச்சி அடையவில்லை.
ஆயுத பூஜைக்கு அதிக வியாபாரம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில், 3 மடங்கு அதிக பழங்களை கொள்முதல் செய்து வைத்திருந்தனர். ஆனால், அவை விற்பனை ஆகாமல் தேங்கியதால் அழுகத் தொடங்கின. வேறு வழியின்றி குப்பைத் தொட்டியில் கொட்டினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago