தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதி மக்கள் மனு அளித்த வண்ணம் உள்ளனர்.
தூத்துக்குடி பாத்திமா நகர், ஆரோக்கியபுரம், மேல அலங்கார தட்டு, கீழ அலங்காரதட்டு, சேதுராஜா தெரு, பெரிய கோயில் தெரு, அய்யனடைப்பு, தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி தனித்தனியாக நேற்று மனு அளித்தனர். `ஸ்டெர்லைட் ஆலையில் எங்கள் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். மேலும், ஸ்டெர்லைட் நிறுவனம் எங்கள் கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வந்தது. தற்போது, ஆலை மூடப்பட்டுள்ளதால் அனைத்து வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago