தூத்துக்குடியில் முதியவர் வெட்டிக் கொலை : வைகுண்டம் நீதிமன்றத்தில் இருவர் சரண்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி ராஜகோபால் நகர்பகுதியைச் சேர்ந்தவர் பெ.ஆவுடையப்பன் (61). இவரது குடும்பத்தினர் கடந்த 14-ம் தேதி தாங்கள் புதிதாக வாங்கிய காரில் கோயிலுக்கு செல்வதற்காக தெருவில் தயாராக இருந்தனர். அந்தநேரத்தில் எதிர்வீட்டைச் சேர்ந்த சுப்பையா மகன் பிரகாஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை தெருவில் வைத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது, காரின் மீது தண்ணீர் பட்டுள்ளது. இதனை ஆவுடையப்பன் குடும்பத்தினர் கண்டித்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஆவுடையப்பன் சந்திரேசன் நகரில் உள்ள தனது மாட்டுத்தொழுவத்தில் இருந்தார். அவரிடம், சுப்பையா, அவரது சகோதரர் நாராயணன், சுப்பையாவின் மகன்கள் பிரகாஷ், ராம்ஜெயந்த் மற்றும்சிலர் அங்கு வந்து தகராறுசெய்தனர். இதில், ஆவுடையப்பனும், அவரது மகன் பெருமாளும்(29) அரிவாளால் வெட்டப்பட்டனர். ஆவுடையப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்தபெருமாள் தூத்துக்குடி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தினார். சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய சுப்பையா, அவரது மகன் பிரகாஷ் ஆகியோர், வைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நேற்று சரணடைந்தனர். மற்றவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்