வேலூரில் பதிவுத்துறை அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
தமிழக பதிவுத்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க மண்டல துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் மக்கள்குறைதீர்வு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மண்டலத்தில் முதல் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.
வேலூர் துணை பதிவு துறை அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட துணை பதிவுத்துறை தலைவர் தர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதேபோல், வேலூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) சுடரொளி மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில், பதிவுத்துறை வழங்கும் சேவைகளான பத்திரப்பதிவு, பத்திரம் திரும்பப் பெறுதல், திருமணச்சான்று, பத்திர நகல் வழங்குதல், பிறப்பு, இறப்பு சான்று வழங்குதல், சங்க பதிவு, சீட்டுப்பதிவு, கூட்டாண்மை நிறுவன பதிவு, வழிகாட்டி மதிப்பு மற்றும் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தொடர்பான புகார்களை வேலுர் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது வேலூர் துணை பதிவுத்துறை தலைவர் அலுவல கத்திலோ அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago