உடுமலையில் பூசணி கிலோ ரூ.2-க்கு கொள்முதல் :

உடுமலை சுற்றுவட்டாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பூசணிக்காய்க்கு, கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.2 மட்டுமே கேரள வியாபாரிகள் வழங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை பூசணி அல்லது பரங்கி, பரங்கிக்காய் என்னும் பெயர்களால் குறிப்பிடப்படும் பூசணிக்காய், உடுமலை சுற்றுவட்டார விவசாயிகளால் கணிசமாக பயிரிடப்படும் கொடி வகைகளில் ஒன்றாக உள்ளது. உணவுக்காக மட்டுமின்றி, மருத்துவத்துக்கும் பரங்கிகாய் பயன்படுவதாக கூறப்படுகிறது. ஏக்கருக்கு 3 முதல் 4 டன் வரை விளைச்சல் தரக்கூடியது. இந்நிலையில், மொத்த வியாபாரிகளால் குறைந்த விலைக்கே பூசணி கொள்முதல் செய்யப்படும் நிலை உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது ‘‘பிற பயிர்களை போலவே, பூசணிக்கும் பல்வேறு வழிகளில் செலவு செய்து அறுவடையைக்காண வேண்டியுள்ளது. கேரளாவில் இதன் நுகர்வு அதிகம் என்பதால் விற்பனைக்காக அம்மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக அறுவடை தொடங்கியுள்ள நிலையில், ஒரு கிலோ ரூ.2-க்குதான் கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லரை விலையாக ரூ.20 வரை விற்கப்படுகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்