செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்முறையாக மாவட்ட ஊராட்சி குழு அமைகிறது. இதில் தலைவர் பதவியைப் பிடிக்க திமுக உறுப்பினர்களிடையே 4 முனை போட்டி நிலவி வருகிறது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்மையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 16 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக ஓர் இடத்தையும் திமுக 14 இடங்களையும் காங்கிரஸ் ஓர் இடத்தையும் கைப்பற்றின. இதில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது என்பதால் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவி திமுகவுக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது.
முதல் முறையாக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் பெண்களுக்கு இந்த தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காயத்ரி, செம்பருத்தி, ஜெயலட்சுமி, சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 4 பேரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியைப் பிடிக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். காயத்ரி முன்னாள் எம்எல்ஏவின் மருமகள் என்பதால் இவரின் கை ஓங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தொடங்கப்பட்டு முதல்முறையாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதால் போட்டி கடுமையாகி வருகிறது. இதற்கு வரும் 22-ம்தேதி விடை கிடைத்து விடும்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக அதிக இடங்களை கைப்பற்றியது என்பதால் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவி திமுகவுக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago