 நிகேதன் பள்ளியில் 2 பேர் ஐஐடி-க்கு தகுதி பெற்று சாதனை :

திருவள்ளூர்  நிகேதன் பள்ளியில் 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற யஸ்வந்த் கணபதி, விஷ்ணு ஆகிய மாணவர்கள் ஐஐடியில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

 நிகேதன் பள்ளியில் பயின்ற மாணவர்களில் இதுவரையில், ஐஐஐடியில் 2 மாணவர்களும், என்ஐடியில் 8 மாணவர்களும், ஐஐடியில் 2 மாணவர்களும் சேர்ந்து பெருமை சேர்த்துள்ளனர். மேலும் ஜேஇஇ மெயின் தேர்வில் 17 மாணவர்களும், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் 2 மாணவர்களும் 2020-21-ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இச்சாதனை மூலம் ஆண்டுதோறும் இந்திய அளவில் புகழ் பெற்ற கல்லூரிகளில் மாணவர்களை இடம் பெறச் செய்வதில் முதன்மைப் பள்ளியாக  நிகேதன் பள்ளிக் குழுமம் திகழ்கிறது.

“சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளின்படி  நிகேதன் பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் ஐஐடியில் சேர தகுதி பெற்றது,  நிகேதன் கல்விக் குழுமத்துக்கு கிடைத்த வெற்றி” எனக் கூறிய பள்ளி தாளாளர் விஷ்ணு சரண், மாணவர்களை அழைத்து இனிப்பு வழங்கி பாராட்டினார்.

பள்ளி இயக்குநர் பரணிதரன், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஐரின் குமாரி, துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களும் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்