சிவகங்கையில் 10 நாட்களாக ரேஷன் பொருட்கள் விநியோகம் நிறுத்தம் : கடைகளுக்கு தாமதமாக பொருட்களை அனுப்புவதால் குளறுபடி

By செய்திப்பிரிவு

சிவகங்கை பகுதியில் வாகனங் களுக்கான டீசலை மிச்சப்படுத்த இரு தவணைகளில் அனுப்பப்படும் ரேஷன் பொருட்கள், ஒரே தவணையாக, தாமதமாக கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த குளறுபடியால் கடந்த 10 நாட்களாக பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.

சிவகங்கை வட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைக ளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சிவகங்கை கிடங்குகளில் இருந்து அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட் கள் அனுப்பப்படுகின்றன. இப் பொருட்களை கொள்முதல் செய்து வாகனங்களில் அனுப்பும் பணியை பாம்கோ நிறுவனம் மேற்கொள்கிறது.

மேலும் ரேஷன் பொருட்கள் கடைகளுக்கு 2 தவணைகளாக அனுப்பப்படும். ஒரு குறிப்பிட்ட அளவு முந்தைய மாதத்தின் கடைசி தேதிக்குள்ளும், மீதிப் பொருட்கள் அந்த மாதத்தின் 15-ம் தேதிக்குள்ளும் அனுப்பப் படும். ஆனால் இம்மாதம் 16-ம் தேதி வரை மீதிப் பொருட்களை அனுப்பவில்லை. இதனால் ரேஷன் கடைகளில் கடந்த 10 நாட்களாக பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த சில மாதங்களாக பொருட்கள் முறை யாக அனுப்புவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், ‘வாகன ஒப்பந்தம் எடுத்தவர்கள் டீசலை மிச்சப்படுத்த இரு தவணைகளில் கொண்டுவர வேண்டிய பொருட்களை ஒரே தவணையில் கொண்டு வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட காலங்களில் ரேஷன் பொருட்களை கார்டுதாரர்களுக்கு வழங்க முடியவில்லை,’ என்றனர்.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தொடர் விடுமுறையால் ரேஷன் கடைகளுக்கு பொருட் களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் பொருட்கள் அனுப்பப்படும்,’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்