கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறப்பு - தென்பெண்ணை ஆற்றுப்பகுதி மக்களுக்கு அபாய எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ள நிலையில், தென் பெண்ணை ஆற்றுப்பகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

கர்நாடக மாநில தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 988 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1,178 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து நேற்று முன்தினம் விநாடிக்கு 998 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் நேற்று நீர் திறப்பு 1,068 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 41.66 அடியாக உள்ளது.அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய் துறை மூலம் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென்பெண்ணை ஆற்றை யாரும் கடந்து செல்ல முயற்சிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்